மொபைல் ஆப் மூலம் மின்கட்டணம் புதிய வசதி அறிமுகம்


மொபைல் ஆப் மூலம் மின்கட்டணம் புதிய வசதி அறிமுகம் | மின்கட்டணத்தை மொபைல் ஆப் மூலம் செலுத்தும் புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் தங்கள் அலை பேசி மூலம் 'ஐபி கஸ்டமர்' எனும் இந்தியன் வங்கி யின் மொபைல் ஆப் வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் எளிதில் மின்கட்டணம் செலுத்தவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் உள்ள வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் வழிமுறை மற்றும் விளக்கத்தினை தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் www.tangedco.gov.in என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். அலைபேசி வங்கியியல் மூலம் மின்கட்டணம் இணையவழி வாயிலாக மின்கட்டணம் செலுத்த ஏற்கெனவே உள்ள முறைகளான வலைதள வங்கியியல், பேமென்ட் கேட்வே (டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு), தபால் நிலையங்கள், தமிழ்நாடு மெர்கன்டைல்/ சிட்டி யூனியன் மற்றும் லட்சுமி விலாஸ் வங்கிக் கிளைகள், இ-சேவை மையம், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் செலுத்திவரும் வசதிக ளோடு கூடுதலாக இவ்வசதி வழங்கப்படுகிறது. லட்சுமி விலாஸ் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, கரூர் வைஷ்யா வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி ஆகியன தங்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி வங்கியியல் (மொபைல் பேங்கிங்) மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியும் ஏற்கெனவே உள்ளது. எனவே மின்நுகர்வோர்கள் இவ்வசதியினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.