பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு ‘மொபிகேஷ் எம்-வாலட்’ சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை


பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு 'மொபிகேஷ் எம்-வாலட்' சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை | ஸ்மார்ட் போன் மட்டுமல்லாமல் சாதாரண செல்போனிலும் பணப் பரிவர்த்தனை செய்யும் வகையிலான 'மொபிகேஷ் எம்-வாலட்' என்ற புதிய சேவையை பிஎஸ்என்எல், பாரத ஸ்டேட் வங்கி இணைந்து தொடங்கியுள்ளன. இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் எஸ்.எம்.கலாவதி சென்னை யில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பணமதிப்பு நீக்கத்தால் மக்க ளுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும், ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலி யுறுத்தியுள்ளார். இந்நிலையில், நகர்ப்புற மக்கள் மட்டுமல்லா மல் கிராமப்புற மக்களுக்கும் பயன்படும் வகையில் பிஎஸ்என் எல், பாரத ஸ்டேட் வங்கி இணைந்து 'மொபிகேஷ் எம்-வேலட்' என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளோம். இதன்மூலம் செல்போனி லேயே வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தையும் செய்யலாம். ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, சாதாரண மாடல் செல்போன் வைத்திருப்பவர்களும் இந்தச் சேவையை முழுமையாகப் பெற முடியும். செல்போனில் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும் என்ப தில்லை. ஸ்மார்ட்போன், கம்ப்யூட் டர், வங்கிக் கணக்கு இல்லாத வர்களும் இச்சேவையைப் பெற முடியும். ஸ்மார்ட் போன் வைத்தி ருப்பவர்கள் பிளே ஸ்டோரில் நேரடியாக மொபிகேஷ் (MobiCash) என்ற செயலியை பதி விறக்கம் செய்து அனைத்து வங்கி பரிவர்த்தனை களையும் மேற்கொள்ளலாம். சாதாரண செல்போன் வைத் திருப்பவர்கள் செல்போனில் *511# போட்டு டயல் செய்ய வேண்டும். உடனே சர்வரில் இருந்து 'ஒன்டைம் பாஸ்வேர்டு' வரும். தொடர்ந்து பணப் பரிவர்த்தனைக்கான 'எம்பிஐஎன்' என்ற அங்கீகார எண் வரும். தொடர்ந்து பரிவர்த்தனைக்கான மெனுவும் வரும். பாஸ்வேர்டு மாற்றிக்கொள் ளும் படி தகவல் வந்ததும், பாஸ்வேர்டு மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரரிடம் தேவையான பணத்தைக் கொடுக்க வேண்டும். உடனே உங்கள் செல்போன் எண்ணில் அந்தப் பணத்தை அவர் லோடு செய்துவிடுவார். பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி வரும். அதையடுத்து மொபிகேஷ் செயலி மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள் ளலாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரர்கள் உள்ளனர். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவும் இச்சேவையைப் பெறலாம். ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம். பிஎஸ்என்எல் ரீசார்ஜ்க்கு மட்டும் சேவை வரி இல்லை. மற்ற வாடிக்கையாளர்களுக்கு குறைவான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். ரயில், பேருந்து, தியேட்டர் டிக்கெட், ஆன்லைன் ஷாப்பிங், ஹோட்டல்கள், செல் போன் ரீசார்ஜ், டாப்-அப், வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல் என அனைத்து பரிவர்த்தனைகளையும் எளிமையாக, மிகக் குறைந்த கட்டணத்தில், முழுப் பாதுகாப் புடன் செய்ய இயலும். இவ்வாறு அவர் கூறினார். பாரத ஸ்டேட் வங்கி நெட்வொர்க் பொதுமேலாளர் டி.ஹிந்து சேகர் உடனிருந்தார்.