4ஜி-க்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு 12 மாத டேட்டா இலவசம் ஏர்டெல் புதிய சலுகை


4ஜி-க்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு 12 மாத டேட்டா இலவசம் ஏர்டெல் புதிய சலுகை | 4ஜி-க்கு மாறும் வாடிக்கையாளர் களுக்கு ஒரு வருடத்துக்கான டேட்டாவை இலவசமாக வழங்க பார்தி ஏர்டெல் நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. ஏர்டெல் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் 4ஜிக்கு மாறும் போது இந்த சலுகையை அனுபவிக்கலாம் என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது. இன்று முதல் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும். மாதத்துக்கு 3ஜிபி டேட்டா என வரும் டிசம்பர் 31 வரை பயன்படுத்திக்கொள்ளலாம். ஏர்டெல் 4ஜிக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 9,000 ரூபாய் மதிப்புள்ள டேட்டா இலவசமாக கிடைக்கும். 4ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் 4ஜி சேவையை பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களை அழைக் கிறோம் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவு இயக்குநர் அஜய் பூரி தெரிவித்தார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மார்ச் 31 வரை டேட்டா, குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகளை இலவசமாக வழங் கியது. அதனை அடுத்து ஏர்டெல் இப்போது இந்த சலுகையை அறிவித்திருக்கிறது.