2 டெரா பைட் பென்டிரைவ்


2 டெரா பைட் பென்டிரைவ் | இப்போதெல்லாம் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இலவசமாகவும், குறைந்த விலைக்கும் இன்டர்நெட் வசதியை வழங்குவதால் வாடிக்கையாளர்கள் நெடுநேரம் இன்டர்நெட்டில் கழிக்கிறார்கள். அதிகமான படங்கள், வீடியோக்கள், சினிமாக்கள் மற்றும் தேவையான தகவல்களை பதிவிறக்கம் செய்கிறார்கள். புழக்கத்தில் உள்ள மெமரிகார்டு, பென்டிரைவ் போன்றவை குறைந்த ஜி.பி. அளவிலேயே சேமிப்புத்திறன் கொண்டிருப்பதால் அவை தகவல்களால் நிரம்பி வழிகின்றன. எனவே முக்கியமான தகவல்களையும், தேவையான தகவல்களையும் நீண்ட காலம் சேமிக்கும் வகையில் கையடக்க சேமிப்புக் கருவி கிடைத்தால் பரவாயில்லை என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் வந்துவிட்டது. அந்த ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் 'கிங்ஸ்டன்' நிறுவனம் ஒரு டெராபைட் மற்றும் 2 டெராபைட் அளவு சேமிப்புத்திறன் கொண்ட பென்டிரைவ் களை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் 'டேட்டா டிராவலர்'. 7.2 சென்டிமீட்டர் நீளமுள்ள இந்த சேமிப்புக் கருவி தற்போதைய 8 ஜி.பி. மெமரிகார்டுகளை ஒப்பிடும்போது, 2 லட்சத்து 60 ஆயிரம் மடங்கு அதிக தகவல்களை சேமிக்கக்கூடியது. அதாவதுலட்சம் பென்டிரைவ்கள் அல்லது 100 பேர் பணி புரியும் நிறுவனத்தின் கணினியில் ஓராண்டிற்கு சேகரமாகும் பணிக் கோப்புகள் ஆகியவற்றின் அளவுக்கு இணையான தகவல்களை உங்கள் விரல் நீள டேட்டா டிராவலர் சேமிப்பு கருவிக்குள் சேமித்து வைக்க முடியும். இப்போது இணையதளம் வழியாக இவற்றை வாங்க முடியும். விலை 2 ஆயிரத்து 700 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்.