www.digilocker.gov.in | DigiLocker, Govt of India's online service for storing documents & certificates. You can signup also https://www.digilocker.gov.in


DigiLocker:Towards Paperless Governance | Just started using DigiLocker, Govt. of India's cloud based platform for storage, sharing and verification of documents and certificates. You can signup also https://digilocker.gov.in

 

How can I get a DigiLocker account?

1.   Signing up for DigiLocker is easy -

2.   all you need is your mobile number.

3.   Your mobile number will be authenticated by sending an OTP (one-time password) followed by selecting a username & password. This will create your DigiLocker account.

4.   After your DigiLocker account is successfully created, you can voluntarily provide your Aadhaar number (issued by UIDAI) to avail additional services.

5.  Storage Space |  1 GB

https://www.digilocker.gov.in

சான்றிதழ் மற்றும் முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்க உதவும், டிஜிட்டல் லாக்கரான பாதுகாப்பு பெட்டக வசதியை, நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் லாக்கரின் பயன்கள் மற்றும் அதை பயன்படுத்தும் வழிமுறைகள் இதோ: எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் இணைய யுகத்தில், சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, இனி கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து பாதுகாப்பதுடன், டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வசதியை அளிக்கிறது, அரசின், 'டிஜிட்டல் லாக்கர்' திட்டம். இதற்கென, digitallocker.gov.in என்ற தனி இணையதள முகவரி உள்ளது. 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த, 'ஆன் - -லைன்' பாதுகாப்பு பெட்டக வசதி, 'டிஜி லாக்கர்' எனும் பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய அளவில் இந்த வசதி, வரும், 1ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்படுகிறது. டிஜிட்டல் லாக்கரின் நோக்கம்: வங்கிகளில் லாக்கர் வசதியை பயன்படுத்துவது போல இணையத்தில் இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பயன்படுத்தலாம். அரசு நிர்வாகத்தை மேலும் எளிமையாக்கி, காகித ஆவணங்கள் பயன்பாட்டின் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த, டிஜி லாக்கர் அமைகிறது. டிஜி லாக்கரில் ஒவ்வொரு குடிமகனும் தனக்கான லாக்கரை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த லாக்கரில் சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்கலாம். அதோடு, அரசால் வழங்கப்படும் டிஜிட்டல் வடிவிலான ஆவணங்களையும் இதில் சேமித்து வைக்கலாம். லாக்கரை பயன்படுத்தும் வழி: டிஜிட்டல் லாக்கர் ஒருவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். பொதுமக்கள் டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜி லாக்கர் இணையதளத்தின் மூலம் தங்களுக்கான லாக்கர் வசதியை உருவாக்கிக் கொள்ளலாம். ஆதார் எண்ணை இணையதளத்தின் லாகின் பகுதியில் சமர்ப்பித்து தங்களுக்கான கணக்கைத் துவக்கலாம். அதன் பிறகு ஒருமுறை பாஸ்வேர்டு, மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பாஸ்வேர்டு மூலம், லாக்கரை துவக்கிக் கொள்ளலாம். அதன் பின், பயனாளிகள் தங்களுக்கான பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளலாம். லாக்கரை அமைத்த பின், அதில் சான்றிதழ்களை பதிவேற்றி சேமிக்கலாம். பான் கார்டு, பள்ளி, கல்லுாரி சான்றிதழ், பாஸ்போர்ட், அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இதில் சேமிக்கலாம். சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அல்லது, 'பி.டி.எப்.,' கோப்பாக பதிவேற்றலாம். சான்றிதழ்களை யாருக்கேனும் சமர்ப்பிக்க விரும்பினால், லாக்கர் மூலமான, - மெயில் வழியே அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் கைகளில் சான்றிதழ்களை எடுத்துச் செல்வதை தவிர்க்கலாம்; சான்றிதழ் தொலைந்து விடும் எனும் கவலை இல்லாமலும் இருக்கலாம். இவை தவிர, பல்வேறு அரசு அமைப்புகளால் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும் ஆவணங்களையும், இதில் சேமித்து வைக்கலாம். ஆவணங்களை இணைய கையெழுத்திட்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது. பொதுமக்களுக்கு டிஜிட்டல் சேமிப்பு வசதியை அளிப்பதுடன், காகித பரிமாற்றத்தைக் குறைத்து அரசு நிர்வாகத்தையும் வேகமாக்க இது உதவும் என்று கருதப்படுகிறது.