கூகுள் உருவாக்கியுள்ள, வெர்ச்சுவல் விசைப்பலகையான ஜிபோர்டு செயலி


ஜிபோர்டு வசதி ஸ்மார்ட்போன்களுக்காக என்று கூகுள் உருவாக்கியுள்ள, வெர்ச்சுவல் விசைப்பலகையான ஜிபோர்டு செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம். விரைவாக டைப் செய்வதற்காக இந்தச் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையென்றாலும், ஜிபோர்டு செயலியைப் பயன்படுத்துவது பற்றியும் பரிசீலிக்கலாம். கிளைடு டைப்பிங் உள்ளிட்ட வசதிகளை அளிக்கும் இந்த விசைப் பலகை எண்களை டைப் செய்வதில் உள்ள சிக்கலுக்கான தீர்வையும் அளிக்கிறது. போனில் டைப் செய்யும்போது, சில நேரம் எண்களை டைப் செய்ய வேண்டிய தேவை வரலாம். இதுபோன்ற நேரத்தில் எண்களுக்கும் எழுத்துகளுக்குமாக மாறுவது சிக்கலாக இருக்கும். இதனால், நேரமும் விரையமாகும். இதைத் தவிர்க்க, ஜிபோர்ட் செட்டிங்ஸ் பகுதியில் , கீபோர்டு தேர்வுக்கு சென்று, பிரிபரன்ஸ் வாய்ப்பு மூலம் நம்பர் ரோ வசதியை வர வைத்தால், கீபோர்டு மேல் பகுதியில் எழுத்துகளுக்கு மேல், எண்கள் வரிசை தோன்றும். இதன்மூலம் எண்களுக்கு மாற வேண்டிய தேவை இல்லாமல், வேகமாக டைப் செய்யலாம். குரல் வழி டைப்பிங் வசதியையும் இது அளிக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்


ஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் | ஸ்மார்ட் போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இமாலய அளவில் உள்ளது. இது ஆண்டுக்காண்டு ஒரு உன்னத நிலையை எட்டி பிடித்து ஸ்மார்ட் போன்கள் மீதான மக்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. ஸ்மார்ட்போன்கள் பேசுவதற்கும், சமூக தளங்களில் இயங்குவதற்கு என்பது மட்டுமல்லாது சிறு நிறுவனங்களின் வளர்ச்சி, பாதுகாப்பு அம்சங்கள், ஆப்ஸ்களின் மூலமான பெரும் வளர்ச்சி, சிறப்புமிகு இடந்தேடல் என பல முன்னேற்ற அம்சங்களை கொண்டு மக்களுடன் இணைந்த நபராய் உள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அடுத்த கட்டம் நோக்கி பயணிக்கிறது. ஆம் அடுத்த ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட போகும் சில மாற்றங்களை ஆராயும்போது அதன்மீது அதிக ஆர்வமும், கூடுதல் கவன ஈர்ப்பும் ஏற்படுகிறது. மின்னணு அதிர்வலை தொழில்நுட்பத்தின் மூலமாக தொடுதிரை அனுபவம் என்பது முற்றிலுமாக மாறுபடும். நாம் எதனை எண்ணி கொண்டு ஸ்மார்ட்போனை தொடுகிறோமோ அது அங்கே காட்சியாக விரியும். ஆம் ஷாப்பிங் செய்ய வேண்டும் என நினைத்தால் ஷாப்பிங் இணையதள முகவரிகள் மற்றும் நிறுவனங்கள் பகுதி செல்லும். அதுபோல் நாம் என்ன பொருள் ஆடையா, காலணியா, ஸ்மார்ட்போனா என்று எதை நினைத்து தொடுகிறோமோ அதற்கு ஏற்ப செயல்படும். நாம் நினைத்து செயல்பட்டு தொடுதிரை ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் முன் மின்னணு அதிர்வலை வாயிலாக நாம் தொடும்போது எலக்ட்ரோ ஸ்டிக் அதிர்வுகள் மூளைக்குள் பாய்ந்து நமது எண்ணங்களை வாங்கி உடனடியாக ஸ்மார்ட் போனுக்கு தகவல்களை தருகிறது. எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்து டிஸ்னி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள ஏற்கனவே பலவித ஆய்வுகள் மேற்கொண்டு அதனை செயல்படுத்த பல அமைப்புகளை அமைத்துள்ளன. அதுபோல் ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்தான சில உரிமங்களையும் பதிவு செய்து உள்ளன. ஸ்பீச்-டூ-ஸ்பீச் என்பது 2012-ல் மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய போதும் தற்போது தான் பன்மொழி கான்ப்ரன்ஸ் கால்கள் என்பது வணிக ரீதியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது இன்னும் முன்னேற்றம் பெற்று பல நாட்டு மக்களும் முக்கியமான விஷயங்களை எந்தவொரு மொழி பெயர்ப்பான் மற்றும் மீடியேட்டர் உதவியின்றி தங்களது மொழியில் விஷயங்களை அறிய இது உதவிகரமாக இருக்கும். நெகிழ் தன்மையுடன் மற்றும் உபயோகத்திற்கு தேவையான அளவில் மாற்றம் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்கள். அதாவது மடித்து இயக்க கூடியவாறும், சுருக்க திலையில் சிறியதாக மாற்றி பின் பெரிய அளவில் விரிய செய்யக் கூடிய ஸ்மார்ட்போன்கள் வரபோகின்றன. OLED எனும் தொழில்நுட்பம் வாயிலாக ஸ்மார்ட்போன் காட்சி திரைகளை சுருட்டலாம். மடக்கலாம், சுருக்கலாம். எனவே வேண்டும்போது பெரிய காட்சி தரையில் படம் பார்ப்பது. பிறகு மடித்து சிறியதாக வைத்து கொள்வது. அதுபோல் இருபக்க காட்சி திரை கொண்ட செயல்பாடு. நாம் நமக்கு பிடித்ததை பார்க்க மறுபுறம் நமது நண்பர் பிற தேடல்களை நிகழ்த்தும் வகையிலான வசதியமைப்பு. ஏற்கனவே ஸ்மார்ட் வளர்ச்சிகளின் வளைய கூடிய அமைப்பு திறம்பட இயங்கிட அடுத்து ஸ்மார்ட் போன்களின் உருவ ரீதியிலான நெகிழ்வும் கைகூட போகிறது. பலதரப்பட்ட பணிகளை ஸ்மார்ட் போனில் செய்ய வேண்டி இருப்பதால் உடனுக்குடன் பேட்டரி சார்ஜ் போய்விடுகிறது. இதற்கான பிரத்யேகமான அல்ட்ரா-ராபீட் சார்ஜர் வரபோகிறது. இதன் மூலம் 30 செகண்டில் முழு பேட்டரியும் சார்ஜ் செய்யப்பட்டு விடும். இவை அனைத்தும் கூடிய விரைவில் ஸ்மார்ட்போன் உலகின் தொழில்நுட்ப வசதிகளாய் நுழைய போகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நம்மோடு உரையாடி நாம் கூறும் பணிகளை செய்திடும்-கூகுள் ஹோம்


நம்மோடு உரையாடி நாம் கூறும் பணிகளை செய்திடும்-கூகுள் ஹோம் | இன்றைய நாளில் பலதரப்பட்ட பணிகளை ஒரே நேரத்தில் அவசரமாக செய்யவேண்டிய சூழல் உள்ளது. சிலர் உடல்நிலை காரணமாக சில பணிகளை செய்யமுடியாதபடியும் இருக்கும். அது போல நாம் தனிமையில் இருக்க நேரிடும் போது பேச்சு துணையின்றி கஷ்டபடுவோம். இவை அனைத்திற்கும் விடைகாணும் விதமாய் நமக்கு உதவிபுரியும் நோக்கில் இயந்திர உதவியாய் வந்துள்ளார். இவர் ரோபோ அல்ல. ஆனால் எல்லா பணிகளையும் இருந்த இடத்தில் இருந்து ஆணையிட உடனே அப்பணியை செய்து முடித்து விடுகிறது. என்னடா அதிகமாக ஆர்வத்தை துண்டுகிறார் என நினைத்து விட வேண்டாம். இப்படி ஓர் துணையாளர், உதவியாளர் என வியக்கும் அளவு கூகுள் ஹோம் வந்துள்ளது. பல வியத்தகு தொழில்நுட்ப கருவிகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கிட்ட கூகுள் நிறுவன வெளியீடு தான் கூகுள் ஹோம். அன்றாட பணிகளை சுலபமாக்கும் கூகுள் ஹோம் என்பது பேச்சு மூலம் இயங்கக்கூடிய ஸ்பீக்கர் இணைப்புடன், சக்தி வாய்ந்த கூகுள் அஸிஸ்டெண்ட் துணையுடன் இயங்குகிறது. நமது பேச்சு மூலம் சொல்லும் கட்டளைகளை உடனடியாக செயல்படுத்தி தருகிறது. கூகுள் ஹோம் துணையுடன் அனைத்து இயந்திரம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் செயல்களை இயக்கி மற்றும் கன்ட்ரோல் செய்ய முடியும். நம்முடைய கேள்விகளுக்கு பதில் கூறும் கூகுள்-ஹோம் கூகுள்-ஹோம் என்பதை பக்கத்தில் வைத்து கொண்டு எந்த வித உதவிகளையும் கேட்க முடியும். நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நாம் கேட்கும் மொழியிலேயே வழங்குகிறது. அதாவது செய்திகள், பருவநிலை தகவல்கள், நேரம், விளையாட்டு என்பதுடன் ஒவ்வொரு நகர பகுதிகளிலும் உள்ள வியாபார ஸ்தலங்கள் குறித்த தகவல்கள், திறந்திருக்கும் நேரம், விடுமுறை நாள் என்றவாறு எந்தவித தகவல்களை உடனடியாக பதிலாக அளித்து விடும். இசைபாடல்களை கேட்க உதவும் கூகுள் ஹோம் நாம் எந்த வித தொடுதலுமின்றி அமர்ந்தபடி எனக்கு இந்த பாடல் வேண்டும் என்று கூறினால் போதும் உடனடியாக அந்த பாட்டு ஒலிக்க தூண்டும் இதில் சூப்பர் பவர் ஸ்பீக்கர் மூலம் அதிக ஒலி சத்தத்துடன், துல்லியமான வெளிபாடு கொண்ட பாடல்களை கேட்டிட முடியும். வீட்டின் அனைத்து மின்னணு சாதனங்களுடன் இணைக்கக்கூடிய கூகுள் ஹோம் வீட்டிலுள்ள ஸ்மார்ட் மின்னணு சாதனங்களான விளக்குகள், தொலைகாட்சி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், வாட்டர் ஹீட்டர், எலட்ரிக் குக்கர், ஸ்மார்ட் விளக்குகள் என்றவாறு 1000-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் இயந்திரங்கள் என்றவாறு 150-க்கும் மேற்பட்ட சிறப்புமிகு பிராண்ட் பொருட்களுடன் இணைந்து செயல்படகூடியது கூகுள் ஹோம். நாம் அமர்ந்த இடத்திலிருந்து வாட்டர் ஹீட்டர் இவ்வளவு வெப்பநிலையில் தண்ணீர் சூடாக வேண்டுமென்பது முதல் எலக்டிரிக் கெட்டில் டீ தயார் செய்வது, விளக்குகள் எரிய வைப்பது, வாஷிங்மெஷினை இயக்குவது என்றவாறு பல பணிகளை நமது பேச்சுமூலமே இயக்கிட முடியும். இதிலுள்ள க்ரோம்காஸ்ட் மூலம் தொலைகாட்சி நிகழ்வுகளை நிறுத்துவது, முன் இயக்கம் மற்றும் பின் இயக்கம் என்பதனை நமது விரல் படாமலேயே மேற்கொள்ள முடியும். அது போல் எனக்கு நெட்பிளக்ஸ் போன்ற ஆன்லைன் திரைப்படங்களுக்கான ஆப்ஸ்-லிருந்து இந்த படம் ஒளிப்பரப்ப வேண்டும் என கூறினால் போதும் உடனே அப்படம் காட்சிபடுத்தப்படும். பொழுது போக்குடன் விளையாடவும் செய்யும் கூகுள் ஹோம் நம்முடன் எதிர் அமர்ந்து ஓர் மனிதரைப்போல் விளையாடலாம். புதிய விஷயங்களை நம்முடன் பகிரவும், கதைகள் போன்றவற்றை சொல்லவும் கூகுள் ஹோம் உதவுகிறது. குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகள் கூறும், பாட்டுக்கள் பாடும் நாம் எவருக்கும் பேச வேண்டும் எனில் உடனே மொபைலை தொடமலே அவருடன் இணைப்பை ஏற்படுத்தி தரும். அனைவருக்கும் உற்ற துணையாகவும், உதவியாளனாய் கூகுள் ஹோம் உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

55" Class The Frame 4K UHD TV சாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம்


சாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம் | சாங்சங் இந்தியா நிறுவனம் தி ஃப்ரேம் என்கிற பெயரில் புதிய அதிநவீன டிவியை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரிவு பொது மேலாளர் ப்யூஷ் குன்னபல்லி கலந்து கொண்டு பேசுகையில், வாடிக்கையாளர்களில் தேவையறிந்து அதி நவீன தொழில்நுட்பங்களில் சாம்சங் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்தர புத்தாக்க முயற்சியாக தி ஃப்ரேம் அறிமுகமாகிறது. தொலைக்காட்சி திரையை பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி, நமது விருப்பங்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் புகைப்பட சட்டக அனுபவத்தையும் தி ஃபிரேம் டிவி அளிக்கும். புகழ்பெற்ற வெஸ்பெகர் நிறுவனத்துடன் இணைந்து இதன் வடிவமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இந்திய டிவி சந்தையில் முன்னணி பிராண்டாக சாம்சங் 30 சதவீத சந்தையை வைத்துள்ளது. இதில் 52 அங்குலம் உள்ளிட்ட உயர்ரக மாடல்கள் சந்தை யில் 42 சதவீத சந்தை சாம்சங் வசம் உள்ளது. உயர்ரக பிரிவில் தமிழக அளவில் 54 சதவீத சந்தையுடன் முன்னிலையில் இருக்கிறோம். தற்போது உயர்ரக மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் புத்தாக்க முயற்சியாக சாம்சங் தி ஃப்ரேம் விளக்கும் என்றார். இந்த டிவியை சாம்சங் நிறுவனம் சென்னை உற்பத்தி ஆலையில் தயாரிக்கிறது. 55 அங்குல டிவியின் விலை ரூ.2,74,900 ஆகவும், 65 அங்குல டிவியின் விலை ரூ.3,99,900 ஆகவும் இருக்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது


1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது | தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது. இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலமாக ஒரு நொடியில் ஆய்வுசெய்துவிட முடியும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuineness) ஆய்வு செய்யும் பணியை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அரசு பணியில் சேரும் ஆசிரியர்களும், ஊழியர்களும் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பது, பணிவரையறை செய்வது உள்ளிட்ட பணிகள் இறுதி செய்யப்படும். இதுவரையில், அரசு பணியில் சேருவோரின் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது கல்வித்துறை அலுவலர்கள் மூலமாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பணியாளர்கள் பழைய ஆவணங்களை தேடிப்பிடித்து சான்றிதழ் மற்றும் மதிப்பெண் விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னரே மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சான்று அளிக்கப்படும். அண்மைக் கால சான்றிதழ்களை தேர்வுத்துறையினர் விரைவில் கண்டறிய முடியும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களாக இருப்பின் பழைய ஆவணங்களை தேடிப்பிடிப்பதே மிகப்பெரிய பணியாக இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மைத்தன்மை சான்று கிடைக்க காலதாமதமாகும். இதன் காரணமாக, அவர்கள் தகுதிகாண் பருவம் முடிப்பதும், பணிவரன்முறை பெறுவதிலும் தாமதம் ஏற்படும். இதனால், அவர்கள் பல்வேறு பலன்கள் பெறுவதும் பாதிக்கப்படலாம். காலதாமதத்துக்கு முற்றுப்புள்ளி இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக்கி உள்ளது. அதன்படி, கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரையில் ஒரு கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த அதிகாரி மேலும் கூறும்போது, "டிஜிட்டல்மயமாக்கப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் பிரத்யேக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசிய எண்) வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைனிலையே ஒருநொடியில் ஆய்வு செய்துவிட முடியும். மேலும், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் லாக்கர் மூலம் ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்.ஜெ.கு.லிஸ்பன் குமார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5-ம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் 2020-க்குள் செயல்பாட்டிற்கு வரும்


* 1980 சமயத்தில் கார்களில் ஆண்டனா உதவியோடு பயன் படுத்தப்பட்ட ஏ.எம்.பி.எஸ். (ஆடோமேடிக் மொபைல் போன் சர்வீஸ்) சேவையே முதல் தலைமுறை செல்போனாகும்.
* 1990-களில் பயன்பாட்டுக்கு வந்த ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ. தொழில்நுட்ப அலைபேசிகள் இரண்டாம் தலைமுறை செல்போன்கள்.
* ஜி.எஸ்.எம். (குளோபல் சிஸ்டம் பார் மொபைல்) தொழில்நுட்பத்தில் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்றவை இயங்குகின்றன.
* சி.டி.எம்.ஏ. (கோடு டிவிஷன் மல்டி ஆக்சஸ்) தொழில்நுட்பத்தில், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ் போன்றவை இயங்குகின்றன.
* மூன்றாம் தலைமுறை செல்போன்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு புழக்கத்துக்கு வந்த 2.5 ஜி தலைமுறை செல்போன்கள் ஜி.பி.ஆர்.எஸ், இ.டி.ஜி.இ. தொழில்நுட்பங்களில் இயங்கின.
* மூன்றாம் தலைமுறை செல்போன்கள் ஏ.எம்.டி.எஸ்., சி.டி.எம்.ஏ.2000 எனும் இரு தொழில்நுட்பங்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் இயங்கின.
* நான்காம் தலைமுறை செல்போன்கள் வை-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்குபவை.
* செல்போன்களில் பயன்படும் சிம் கார்டு என்பதன் விரிவாக்கம், 'சப்ஸ்கிரைபர் ஐடென்டிடிட்டி மொடுல் கார்டு' என்பதாகும்.
* செல்போன்களில் இடம் பெறும் என்ற குறியீட்டிற்கு ஆக்டோதார்ப் என்று பெயர்.
* 5-ம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் 2020-க்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏர்டெல் வழங்குகிறது ரூ.1,349 விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன் செல்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்


ஏர்டெல் வழங்குகிறது ரூ.1,349 விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன் செல்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் ரூ.1,349 விலையில் 4 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக மொபைல் போன் தயாரிக்கும் செல்கான் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. `மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்' என்ற வாசகத்துடன் இது அறிமுகமாகிறது. ஏற்கெனவே இந்நிறுவனம் இம்மாதத் தொடக்கத்தில் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.1,399 விலையில் அறிமுகம் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத் தக்கது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையைத் தொடங்கும் முன்பாகவே முன்னோட்டமாக இலவச வைஃபை வசதியை அளித்து இத்துறையில் கடுமையான போட்டியை உருவாக்கினார். இதனால் பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கட்டணங்களை குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அடுத்ததாக ரூ.1,500 விலையில் திரும்பி அளிக்கும் வகையில் மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனமும் குறைந்த விலையில் செல்போன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முயற்சியில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வந்தது. இதேபோல மற்றொரு செல்போன் சேவை நிறுவனமான வோடபோன் இந்தியா நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ரூ.999 விலையில் 4 ஜி ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனம் செல்கான் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ரூ.3,500 விலையில் அறிமுகப்படுத்த உள்ள ஸ்மார்ட்போன் 4 அங்குல திரையைக் கொண்டது. இரட்டை சிம் கார்டு வசதி மற்றும் எஃப்எம் ரேடியோ வசதியையும் உள்ளடக்கியது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும். கூகுள் பிளே ஸ்டோர், யுடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இந்த போனுடன் 169 ரூபாய் மதிப்பிலான ஏர்டெல் நிறுவனத்தின் மாதாந்திர பேக் வெளியிடப்படுகிறது. தொகை திரும்ப அளிக்கப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.2,849 தொகையை தவணை அடிப்படையில் செலுத்த வேண்டும். மாதம் ரூ.169 மதிப்பிலான ரீசார்ஜ் வசதி 36 மாதங்களுக்கு அளிக்கப்படும். 18 மாதங்களுக்குப் பிறகு ரு.500 தொகை திரும்ப அளிக்கப்படும். 36-வது மாத முடிவில் ரூ.1,000 திரும்ப அளிக்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 தொகையை சலுகையாகப் பெறலாம். பணத்தை திரும்ப அளிக்கும் திட்டத்தில் 18 மாதங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 தொகைக்கு ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அடுத்து ரூ.500 தொகையானது ரூ.3,000த்துக்கு 18 மாதங்களில் ரீசார்ஜ் செய்திருந்தால் மட்டுமே அளிக்கப்படும். ஏர்டெல் வழங்கும் ஸ்மார்ட்போன் முற்றிலும் வாடிக்கையாளருக்கானது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலத்தில் மேலும் பல செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேரும் திட்டமுள்ளதாக இந்நிறுவன சந்தைப் பொருளாதார பிரிவு தலைவர் ராஜ் புடிபெட்டி தெரிவித் துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்!!!


புதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்!!! ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை பலப்படுத்தும் விதமாக வோடஃபோன் நிறுவனம் ரூ.177 மற்றும் ரூ.496 ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த ஆண்டின் இறுதியில் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்ததிலிருந்தே பிற நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்துவருகின்றன. துவக்கத்தில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் சேவை வழங்கிவரும் ஜியோவில் இணையும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் அவ்வப்போது சலுகைத் திட்டங்கள் சிலவற்றை அறிவித்துவருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமான வோடஃபோன் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.177 திட்டத்தில் புதிய வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 1 ஜி.பி. அளவிலான டேட்டாவைப் பெறலாம். ரூ.496 கட்டணத்திலான மற்றொரு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது முதல் ரீசார்ஜில் 84 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, இலவச ரோமிங் வசதி மற்றும் தினசரி 1 ஜி.பி. அளவிலான டேட்டாவைப் பெற்று மகிழலாம். இச்சலுகைகள் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் பிற நெட்வொர்க்கிலிருந்து வோடஃபோனுக்கு மாறுபவர்களுக்கும் பொருந்தும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.Vodafone has launched two new plans for prepaid customers seeking 1GB daily data allocation and free calls. While one plan is aimed at those looking for a long-term recharge, the other has validity of 28 days only. Vodafone said in a media statement that the plans are available for existing customers as well as MNP users. These new plans have been launched a week after Reliance Jio updated its tariff plans to raise the prices of popular prepaid plans and reducing the validities of postpaid plans.The new Vodafone plan with 1GB data per day and 84-day validity is priced at Rs. 496 and comes with unlimited local and STD calls across any network. In addition, buyers will get free incoming and outgoing calls on roaming with the Vodafone Rs. 496 plan. The company says there is no daily or weekly cap on how many minutes a user can make the calls. This plan competes directly with Jio's Rs. 459 recharge pack, which has the same benefits but also comes with free SMSes and access to its own apps.Similarly, the Rs. 177 Vodafone plan comes with 28-day validity, 1GB data per day, and unlimited calls anywhere in the country across networks; all calls remain free here as well. However, the user will not get the free incoming and outgoing roaming call facility with this plan. There is no Jio plan with 28-day validity and 1GB data per day.Alok Verma, Business Head, Delhi & NCR, Vodafone India, said, "We are pleased to extend world class Vodafone services with a basket of offerings to mobile subscribers in Delhi NCR. The Rs 177 & Rs 496 First Recharges are very attractive offers for pre-paid customers wanting to switch over to Vodafone SuperNet."The new Vodafone plans come just a day after the operator launched a Rs. 69 prepaid pack with unlimited local and STD calls to all operators and 500MB data, with 7-day validity.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்


வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம் | வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஆண்ட்ராய்டு, ..எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ரீகால் அல்லது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கக் கோரும் அம்சம் (Delete for Everyone) வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் WaBetaInfo வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, ..எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ..எஸ் மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் செலியில் தவறாக அனுப்பிய மெசேஜ்களை அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருவதால், இந்த அம்சம் சீராக வேலை செய்ய மெசேஜ் அனுப்புபவர் மற்றும் அதனை பெறுவோரும் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது. புதிய அம்சம் ஜிஃப், எழுத்துக்கள், புகைப்படங்கள், வாய்ஸ் மெசேஜ், லொகேஷன், காண்டாக்ட் கார்டு, கோட்டெட் மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ் ரிப்ளை உள்ளிட்டவற்றிற்கு வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது? வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்கும் போது, வாட்ஸ்அப் சார்பில் ஃபேக் காப்பி மெசேஜ் நீங்கள் அனுப்பியவருக்கு அனுப்பப்படும். மறுபுறம் நீங்கள் மெசேஜ் அனுப்பியவருக்கு ஃபேக் காப்பி சென்றடைந்ததும், அவரது ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன் சாட் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவை சேமிக்கப்படாது. எனினும் குறிப்பிட்ட மெசேஜ் ஐடி டேட்டாபேசில் இருப்பதை வாட்ஸ்அப் முதலில் உறுதி செய்யும். அதன் பின், குறிப்பிட்ட மெசேஜ் அழிக்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் புதிய அம்சம் கீழ் வரும் நிலைகளில் வேலை செய்யாது: - கோட்டெட் மெசேஜில் உள்ள மெசேஜ்களை திரும்ப பெற முடியாது. - பிராட்காஸ்ட் பட்டியலில் அனுப்பப்பட்ட மெசேஜ்களையும் அழிக்க முடியாது. - மெசேஜ் அனுப்பியது முதல் 7 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும், 7 நிமிடம் கழித்து மெசேஜை திரும்ப பெறவோ, அழிக்கவோ முடியாது. - இந்த அம்சம் வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்ட பதிப்பை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும். இதனால் மெசேஜ் அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரும் செயலியை புதிய அப்டேட் செய்திருக்க வேண்டும். இந்த அம்சம் சிம்பயான் இயங்குதளம் கொண்டு இயங்கும் சாதனங்களில் வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Fwd: இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ!


இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ! | 5ஜி நெட்வொர்க் வசதியை கையகப்படுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ தொலைத்தொடர்பு சேவை, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி, வாடிக்கையாளர்களை அள்ளியது. பின்னர் படிப்படியாக சேவைக் கட்டணத்தை நிர்ணயித்தது. இதன் அதிவேகம் இணையச் சேவைக்காக ஏராளமானோர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 4ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், விரைவில் 5ஜி நெட்வொர்க்காக அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, அதனை கையகப்படுத்தும் முயற்சியில் முகேஷ் அம்பானி ஈடுபட்டுள்ளார். இது அமல்படுத்தப்படும் போது, ஜியோவின் 4ஜி சேவை, தானாக 5ஜி ஆக மாறும். ஆனால் அதற்காக 5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கு மாற வேண்டும். சமீபத்தில் குவால்கம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் தனது டிவிட்டரில் 5ஜி ஸ்மார்ட்போனை பதிவிட்டுள்ளார். அதுவே உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி சேவையை பெற முயற்சி எடுக்கும். ஆனால் அவர்களின் ஜியோ முந்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எழுத உதவும் இணையதளம்


கம்ப்யூட்டரில் டைப் செய்ய வேர்ட் கோப்பு பரவலாக நாடப்பட்டாலும், இணையத்திலேயே எழுத உதவும் மென்பொருள் சார்ந்த தளங்களுக்கும் குறைவில்லை. அந்த வகையில் புதிதாக வந்திருக்கிறது எட்டர் (https://eddtor.com/editor ) இணையதளம். இதன் முகப்பு பக்கத்திலேயே டைப் செய்து அவற்றை கோப்பாக சேமித்துக்கொள்ளலாம். டைப் செய்யும்போது பின்னணியில் அந்தக் கால டைப்ரைட்டர் ஒலி கேட்பது சின்ன சுவாரசியம். இதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது. கோப்புகளைச் சேமிக்கலாம், வெளியிடலாம், மற்றவர்களுடன் பகிரலாம். கோப்புகளில் தேடும் வசதியும் இருக்கிறது. எழுதிய கோப்புகளில் எளிதாக திருத்தங்களையும் செய்யலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

போட்டோஷாப் பாடம்


அடோபின் போட்டோஷாப் மென்பொருளால் ஒளிப்படங்களை எண்ணற்ற வழிகளில் மேம்படுத்தலாம். இதற்கு உதவும் நூற்றுக்கணக்கான நுணுக்கங்கள் உள்ளன. படங்களில் உள்ள வண்ணங்களில் விளையாடுவது போட்டோஷாப் நுணுக்கங்களில் பிரபலமானது. இதற்கான ஐந்து பிரத்யேக வழிகளை ட்விட் யூடியூப் வீடியோ, சேனல் வீடியோ மூலம் அழகாக விளக்கியுள்ளது. அட்ஜெஸ்ட்மெண்ட் லேயரை பயன்படுத்துவது, பெயிண்ட் பிரெஷை இணைத்து பயன்படுத்துவது என வழிகள் உள்ளன. வீடியோவில் கற்க: https://www.youtube.com/channel/UCeR7U67I2J1icV8E6Rn40vQ

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சாதிக்குமா சாம்சங் நோட் 8


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாம்சங் நிறுவனத்துக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. சாம்சங் நோட் 7 ஸ்மார்ட்போனை அவ்வளவு எதிர்பார்ப்புடன் வெளியிட்டார்கள். ஐபோன் 7 மாடல் ஸ்மார்ட்போனுடன் நிச்சயம் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் சந்திக்காத பிரச்சினை நோட் 7 ஸ்மார்ட்போனில் எழுந்தது. நோட் 7 ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி கோளாறு காரணமாக ஸ்மார்ட் போன் வெடித்த நிகழ்வு சில இடங்களில் ஏற்பட்டது. பின்னர் விமானங் களில் கூட அந்த ஸ்மார்ட் போன் வெடித்த நிகழ்வு அந்நிறுவனத்துக்கு அதிர்ச்சியை தந்தது. விமானத்தில் சாம்சங் நோட் 7 ஸ்மார்ட்போனை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு அனைத்து ஸ்மார்ட்போனையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சாம்சங் நிறுவனம் அறிவித்தது. இது அந்த நிறுவனத்துக்கு மிகப் பெரிய நெருக்கடியையும் தந்தது. ஆனால் இந்த ஆண்டு அதே செப்டம்பர் மாதம் நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. தொழில்நுட்ப வகையில் அனைத்து அம்சங்களுடன் ஐபோன் 8 உடன் போட்டி போடும் வகையில் மிக பிரமாண்டமாக சாம்சங் நோட் 8 சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படி என்னென்ன சிறப்பு தொழில் நுட்பம் இதில் இருந்து விட போகிறது என்பவர்களுக்கு சில சாம்பிள் விஷயங்கள்.. பிக்ஸ்பி தொழில்நுட்பம் உலகத்தின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கான பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதை சரியாக புரிந்து கொண்ட சாம்சங் நிறுவனம் புதிய நோட் 8 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. பிக்ஸ்பி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் உங்களது குரல் வழி மூலம் உங்களது போனை இயக்கமுடியும். உதாரணமாக நீங்கள் ரவி என்பவருக்கு `ஹாய்' என்று குறுஞ்செய்தி அனுப்பச்சொன்னால் அதுசெய்துவிடும். பிக்ஸ்பிக்கு என்று தனியான பொத்தான் ஒன்றும் ஸ்மார்ட்போனில் இருக்கிறது. பின்புறம் இருபக்க கேமரா முதன்முறையாக சாம்சங் ஸ்மார்ட்போனில் பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. இரண்டு கேமராக்களும் 12 மெகாபிக்ஸல் திறன் கொண்டவை. ஒரு கேமரா வைட் ஆங்கிளை எடுப்பதற்கும் இரண்டாவது கேமரா ஜூம் செய்து எடுப்பதற்கும் பிரத்யேகமாக வைத்துள்ளனர். இரு கேமராக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் 6.3 அங்குல அளவுக்கு மிக நீண்ட திரை உள்ளது. திரை நீளமே சாம்சங் நோட் 8 வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சாம்சங் நோட் 8 வெளியான அன்று ஐபோன் 8 வெளியானது. இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டில் சாம்சங் 68 சதவீத சந்தையை வைத்துள்ளது. அதை தக்கவைத்துக் கொள்ள பலவேறு புதிய தொழில்நுட்பங்களை சாம்சங் நிறுவனம் நோட் 8-ல் பயன்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஐபோன் சந்தையை பிடிக்கவும் திட்டமிட்டு நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் உத்தி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?


பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? | பான் எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உத் தரவு அமலுக்கு வர இருக்கிறது. இதற்காக வருமான வரி கணக்கு தொடர்பான இணையதள பக்கமான www.incometaxindiaefiling.gov.in. என்ற பக்கத்தில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது. வழிமுறைகள் வருமான வரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in. என்ற இணையப் பக்கத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும். இதற்கு எந்த ரிஜிஸ்ட்ரேஷனும் நீங்கள் செய்ய வேண்டாம். பின்னர் அதில் கேட்கப்பட் டுள்ள `பான்' எண்ணுடன் `ஆதார்' எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயரை கொடுக்க வேண்டும். வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரையின்படி, ஆதார் திட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் யுஐடிஏஐ சோதனை செய்தபின்னர், இணைப்பு உறுதிசெய்யப்படும். எஸ்.எம்.எஸ். மூலம் இணைப்பு ஆதார் எண்ணை பான் எண் ணுடன் இணைப்பதற்கு குறுஞ் செய்தி வசதியையும் வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கைபேசியில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணைக் குறிப்பிட்டு இதனை என்ற 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட ஆதார் பெயரில் ஏதேனும் சிறிய பிழை இருப்பின், ஆதார் ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) தேவைப்படும். ஒன் டைம் பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட்ட செல்போன் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பப்படும். `பான்' எண்ணுடன் `ஆதார்' எண் இணைப்பை ஏற்படுத்த பய னாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் சரியாக குறிப்பிடுவது மிக அவ சியம். பான் எண்ணில் உள்ள பெயர் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர் வேறாக இருந்தால்: ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இருக்கு மாயின் இணைப்பு தோல்வி யடையும். வரி செலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டி யிருக்கும், அதாவது ஆதார் தரவுப் பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங் கைத் திருத்த வேண்டியிருக்கும். பயனாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் சரியாக குறிப்பிடுவது மிக அவசியம்  DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE